‘2018’ பட இயக்குனருடன் இணையும் விக்ரம்.. புதிய தகவலால் ரசிகர்கள் உற்சாகம் !

vikram
‘2018’ பட இயக்குனர் இயக்கத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘2018’. கடந்த மே 5-ஆம் தேதி வெளியான இப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். இந்த படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

vikram

இந்த படத்திற்கு நோபின் பால் இசையமைத்துள்ளார். கடந்த 2018-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற பெரு வெள்ளத்தை அடிப்படையாக வைத்து இப்படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. 

மாபெரும் வெற்றிப் பெற்றுள்ள இப்படம் 200 கோடி மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதற்கிடையே லைக்கா தயாரிப்பில் இயக்குனர் ஜூட் ஆண்டனி ஜோசப் ஒரு படத்தை இயக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம். 

 

Share this story