இயக்குனர் பிரேம் குமார் உடன் இணையும் விக்ரம்...?
1748165098604

இயக்குனர் பிரேம் குமார் உடன் நடிகர் விக்ரம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
'96' படத்தை இயக்கிய பிரேம்குமார் நீண்ட இளைவெளிக்கு பிறகு 'மெய்யழகன்' படத்தை இயக்கியனார். இந்த படத்தை சூர்யா- ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மெண்ட் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டது.
அடுத்ததாக பிரேம்குமார் 96 பாகம் இரண்டு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் நடிகர் விக்ரமிடம் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரேம் குமார், தான் அடுத்து எடுக்க இருக்கும் படத்தின் கதை குறித்து விக்ரமிடம் கூறியிருக்கிறார். இதனால், பிரேம் குமார்- விக்ரம் கூட்டணியில் புதிய படத்தை எதிர்பார்க்கலாம் என கூறப்படுகிறது.