செம கியூட் போங்க…… வைரலாகும் சியானின், துருவ் பிறந்தநாள் வாழ்த்துப்பதிவு.
துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் அவரது தந்தையுமான சியான் விக்ரம் செம கியூட்டான பிறந்தாநாள் வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார்.துருவ் விக்ரமின் பிறந்த நாளை முன்னிட்டு நடிகரும் அவரது தந்தையுமான சியான் விக்ரம் செம கியூட்டான பிறந்தாநாள் வாழ்த்து பதிவை பதிவிட்டுள்ளார்.
வித்தியாசமான கெட்டப்புகளை தேடிப்பிடித்து நடித்து வருபவர் விக்ரம் ‘சேது’ படத்தில் ஆரம்பித்த இந்த முயற்சி தற்போது வரை தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது. சேது படத்திற்கு பிறகு அவர் நடித்த பிதாமகன், தெய்வத்திருமகள் உள்ளிட்ட ஏராளமான படங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். ‘பீமா’ படத்தில் உடலை மெருகேற்றி கேங்ஸ்டராக தோன்றியிருந்தார். பின்னர் ஷங்கரின் ‘ஐ’ படத்தில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தினார். தற்போது தங்கலான் என விக்ரமின் வரலாறு மிக நீளம். சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னுக்கு வந்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Happy Birthday Dhruv!! #HBDDhruvVikram pic.twitter.com/yxq3zKgyuU
— Vikram (@chiyaan) September 23, 2023
அதேப்போல இவரது மகனும் தமிழ்சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக மாறியுள்ளார். 2019ஆம் ஆண்டு வெளியான ‘அர்ஜூன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கான ‘ ஆதித்ய வர்மா’ படத்தில் நடித்தார். தொடர்ந்து சில பல காரணங்களால் அதே கதையை இயக்குநர் பாலா இயக்க ‘வர்மா’ என்ற பெயரில் மீண்டும் படம் உருவானது அதிலும் துருவ் நடித்தார். அடுத்து விக்ரமுடன் இணைந்து மகான் படத்தில் நடித்தார். அடுத்து மாரிசெல்வராஜ் உடன் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இன்று தனது 26வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் துருவ். அதனை முன்னிட்டு சியான் விக்ரம் மகனின் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டு கியூட்டான பிறந்தநாள வாழ்த்து செய்தியை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பலருமே கண்ணே பட்டுடும் போல இருக்கே என கூறிவருகின்றனர்.