விக்ராந்த் - சோனியா அகர்வால் நடித்த "வில்" படத்தின் முதல் பாடல் ரிலீஸ்

WILL

விக்ராந்த், சோனியா அகர்வால் நடித்துள்ள “வில்” படத்தின் “டெஸ்லா” பாடல் வெளியாகியுள்ளது.
 
இயக்குநர் சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் "வில்". இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. 



ஒரு குடும்பத்தில் ஒரு உயில் ஏற்படுத்தும் பிரச்சனை, நீதிமன்றத்திற்கு வழக்காக வருகிறது. அந்த வழக்கு என்ன ஆனது? உயிலின் பின்னால் இருக்கும் தியாகம் என்ன? என்பது தான் இந்தப்படம். உயர்நீதிமன்றப் பின்னணியில், விக்ராந்த், சோனியா அகர்வால் பாத்திரங்கள் ஓவியமாக வரையப்பட்டிருக்கும், வித்தியாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்திற்கு சவுரப் அகர்வால் இசையமைத்துள்ளார். அந்த வகையில், “டெஸ்லா” பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

Share this story