விக்ராந்த் நடித்த Will படத்தின் 2வது பாடல் ரிலீஸ்

will

விக்ராந்த் நடித்துள்ள Will படத்தின் 2வது பாடல் வெளியாகி உள்ளது. 

Foot Stcps Production தயாரிப்பில், இயக்குநர் சிவராமன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வில் {Will}. இந்தப் படத்தில் சோனியா அகர்வால், விக்ராந்த் நடிக்க முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ளது.படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் முதல் பாடல் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் படத்தின் இடண்டாம் பாடலான நேசிக்குதே பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. 

இப்பாடலை கலை குமார் வரிகளில் பிரியா மல்லி பாடியுள்ளார். படத்தின் இசையை சௌரப் அகர்வால் மேற்கொண்டுள்ளார். இந்தப் படத்தை கோத்தாரி மெட்ராஸ் இண்டர்நேஷனல் லிமிட்டெட் இணைந்து வழங்குகிறது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

Share this story