விமல் நடித்து முடித்த புதிய படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
நடிகர் விமல் தமிழ் சினிமாவில் களவாணி மற்றும் தேசிங்கு ராஜா போன்ற வெற்றி படங்களில் நடித்து புகழ் பெற்றார் .இவர் தற்போது நடித்து ரிலீசுக்கு தயாரான படம் பற்றி நாம் இப்பதிவில் காணலாம் .
"வடம்" படக்குழுவினருடன் நடிகர் விமல் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தக்க நடிகர்களில் ஒருவர் விமல்.இவர் தற்போது இயக்குனர் கேத்திரன் இயக்கத்தில் ராஜசேகரன் தயாரிப்பில் "வடம்" என்ற படத்தில் நடித்துள்ளார். இதில் அறிமுக நடிகை சங்கீதா கதாநாயகியாக நடித்துள்ளார்
ஜல்லிக்கட்டு கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் மதுரை, கோவை, தென்காசி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்த நிலையில் நேற்றுடன் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், படக்குழுவினருடன் நடிகர் விமல் ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். படக்குழுவினருக்கு மாசாணியம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் மாலை,அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

