காமெடி கலந்த ரொமான்டிக் காமெடி குடும்ப படம், ‘சண்டக்காரி-ஹீரோ யார் தெரியுமா ?
வெற்றிபெற்ற ‘திரிஷ்யம்’ என்ற படத்தின் 3 பாகங்களை எழுதிய இயக்கியிருந்த ஜீத்து ஜோசப் எழுதியுள்ள கதையுடன் உருவாகியுள்ள காமெடி கலந்த ரொமான்டிக் காமெடி குடும்ப படம், ‘சண்டக்காரி’. இதை ஆர்.மாதேஷ் திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். லண்டனிலுள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தை மையப்படுத்தி கதை நகர்கிறது. நிறுவனத்தின் உயர் அதிகாரியாக ஸ்ரேயா, சாஃப்ட்வேர் ஊழியராக விமல் நடித்துள்ளனர்.
அதிகாரியும், ஊழியரும் எதிரெதிரான துருவங்களில் செயல்படும் நிலையில், அவர்களுக்கு இடையே நடக்கும் மோதல்களும், எதிர்பாராத திருப்பங்களும்தான் திரைக்ககதை. பிரபு, கே.ஆர்.விஜயா, ‘புன்னகை பூ’ கீதா, சத்யன், கிரேன் மனோகர், ரேகா, தேவ் கில், உமா பத்மநாபன், மகாநதி சங்கர் நடித்துள்ளனர். ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் இசை அமைத்துள்ளார். தினேஷ் பொன்ராஜ் எடிட்டிங் செய்ய, ஐயப்பன் அரங்கம் அமைக்க, கனல் கண்ணன் சண்டைப் பயிற்சி அளிக்க, ஹபீப் நடனக் காட்சி அமைத்துள்ளார்.

