தெய்வ மச்சான்... விமல் நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியானது!
விமல் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
கடந்த சில படங்களில் தொடர் தோல்வியைச் சந்தித்து வந்த விமலுக்கு விலங்கு வெப் தொடரின் சீரிஸ் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது. அதையடுத்து தற்போது விமல் மீண்டும் கம்பேக் கொடுக்கத் துவங்கியுள்ளார்.
தற்போது அறிமுக இயக்குனர் மார்ட்டின் நிர்மல்குமார் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் விமல் நடித்து வருகிறார். அண்ணன்- தங்கை பாசத்தை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் தங்கையாக பிக்பாஸ் பிரபலம் அனிதா சம்பத் நடிக்கிறார்.

இப்படத்தை உதய் பிரக்ஷன் மற்றும் மெஜிக் டச் பிக்சர்ஸ் ஆகிய இரு நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன. இந்த படத்தில் இயக்குனர் பாண்டியராஜ் விமலுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர்களை தவிர ஆடுகளம் நரேன், காமெடி நடிகர் பாலசரவணன், நடிகை தீபா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

காட்வின் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். கமில் ஜே அலெக்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார். தற்போது இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்குத் 'தெய்வ மச்சான்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. போஸ்டரில் விமல் கைகூப்பி வணங்குகிறார். பின்னாள் ஒரு குதிரையும் இடம் பெற்றுள்ளது.
இதற்கிடையில் குலசாமி படத்திலும் நடித்து வருகிறார்.

