விமலின் ‘குலசாமி’ ரிலீஸ் தள்ளிவைப்பு... காரணம் என்ன தெரியுமா ?

kulasami

இன்று வெளியாகவிருந்த விமலின் ‘குலசாமி’ படத்தின் ரிலீசை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர். 

நடிகர் விமலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘குலசாமி’. இந்த படத்தில் நடிகர் விமல் ஆட்டோ ஓட்டுனர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.    அறிமுக இயக்குனர் சரவணசக்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்காக நடிகர் விஜய் சேதுபதி, வசனம் மற்றும் திரைக்கதையும் எழுதியுள்ளார்.

kulasami

இந்த படத்தில் கதாநாயகியாக தன்யா ஹோப் நடித்துள்ளார். இவர்களுடன் பிரபல ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாங்கிட் இந்த படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். மேலும் இந்த படத்தில் போஸ் வெங்கட், குட்டிப்புலி சரவண சக்தி, வினோதினி, கர்ணராஜா, மகாநதி சங்கர், முத்துப்பாண்டி, ஜெயசூர்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 

kulasami

மகாலிங்கம் இசையமைத்துள்ள இந்த படத்திற்கு ரவி சங்கரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்தது. அதில் அண்ணன் தங்கை பாசம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்த விஷயங்கள் பேசப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படம் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெய்வமச்சான்’ படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் இந்த படத்தை வெளியிட்டால் வசூல் பாதிக்கும் என்பதால் படத்தை தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இப்படம் வரும் மே 5-ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. 

Share this story