“யாழினும் இனிய என் மகளுடன் ஓர் இனிய பயணம்”- நடிகர் விமலின் நெகிழ்ச்சி பதிவு.

vimal

 களவாணி, வாகை சூட வா, மெரினா,கல கலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா என பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விமல் . இவர் தனது திரை பயணத்தை சிறிய சிறிய கதாபாத்திரங்களில் துவங்கினாலும், இன்று பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

vimal

சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் எந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை  பெறவில்லை, ஆனால் விமல் நடிப்பில் வெளியான ‘விலங்கு’ வெப் தொடர் எதிர்ப்பார்த்ததை விட பெரிய வரவேற்பை பெற்றது. தற்பொழுது விமல் கைவசம் துடிக்கும் கரங்கள், நீ எல்லாம் நல்லா வருவடா, ரெண்டாவது படம், அனைத்துக்கும் ஆசைபடு உள்ளிட்ட படங்கள் உள்ளது.

vimal

இந்த நிலையில் விமல் தற்பொழுது தனது மகள் ஆத்விக்காவுடன் பயணிப்பது குறித்து ஒரு பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில்” யாழினும் இனிய என் மகளுடன் தனித்துப் பயணித்ததை விட இன்பம் ஏதேனும் உண்டோ?” என பதிவிட்டுள்ளார். 

Share this story