விமலின் சினிமா கெரியரை மாற்றிய ‘களவாணி’.. 13 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் ரசிகர்கள் !

‘களவாணி’ திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவையொட்டி ரசிகர்கள் அந்த படத்தை கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் விமல். கிராமத்து கதைக்களத்தில் உருவாகும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றார் முதன்முதலில் ‘களவாணி‘ படத்தின் மூலம் மிகவும் பிரபலமான ஹீரோவாக விமல் மாறினார்.
இந்த படத்தில் விமலுடன் இணைந்து ஓவியா, சரண்யா பொன்வண்ணன், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். களவாணித்தனத்தை மட்டுமே முழு நேர வேலையாக வைத்திருக்கும் ஒரு கிராமத்து இளைஞனின் கதைக்களம் தான் இந்த படம்.
இந்த படத்தில் இடம்பெற்ற ஆனி போய், ஆடி போய், ஆவணி வந்தா என் மகன் டாப்பா வருவான் என்று சரண்யா பொன்வண்ணன் பேசம் டயலாக் இன்றைக்கு ரசிகர்களால் மறக்க முடியாததது. கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான இந்த படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.