மீண்டும் வெப் தொடரில் நடிக்கும் விமல்.. சத்தமில்லாமல் நடைபெறும் படப்பிடிப்பு !

vemal

நடிகர் விமல் மீண்டும் புதிய வெப் தொடர் ஒன்றில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கிராமத்து கதைக்களங்களில் நடித்து பிரபலமான விமல், கடந்த சில ஆண்டுகளாக சறுக்கலை சந்தித்து வந்தார். அதன்பிறகு அவர் நடித்த ‘விலங்கு’ வெப் தொடர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான அந்த வெப் தொடர் விமலுக்கு கம்பேக்காக இருந்தது. 

vemal

இந்த வெப் தொடரின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ஒரு வெப் தொடரில் நடிகர் விமல் நடித்து வருகிறார். இந்த வெப் தொடரில் விமலுக்கு ஜோடியாக பாவ்னி மற்றும் திவ்யா துரைசாமி ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். இந்த வெப் தொடரை ‘என்கிட்ட மோதாதே’ படத்தின் இயக்குனர் ராமு செல்லப்பா இயக்கி வருகிறார். 

vemal

ரிவன்ஞ் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது. திருநெல்வேலி பகுதியில் நடைபெற்று வரும் இந்த வெப் தொடரின் படப்பிடிப்பில் முக்கிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில் இந்த வெப் தொடர் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story