விமல் - யோகிபாபு இணையும் நகைச்சுவை படத்தின் ஷூட்டிங் நிறைவு

vimal

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாக வைத்து விமல் - யோகிபாபு நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ படத்தை இயக்கியவர் மஜீத். இவர் கடைசியாக 2018-ல் வெளியான ‘டார்ச்லைட்’ படத்தை இயக்கியிருந்தார். தற்போது அவர் தயாரித்து இயக்கும் புதிய படத்தில், விமல், யோகிபாபு முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களை தவிர்த்து, சாம்பிகா டயானா, எம்.எஸ். பாஸ்கர், ரவி மரியா, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், சாம்ஸ், நமோ நாராயண், ஞானசம்பந்தம், பவர் ஸ்டார், ரங்கநாதன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.vimal

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 55 நாட்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு முழுமையாக முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்க்‌ஷன் பணிகள் தற்போது நடந்து வருகிறது. புரோக்கர்களால் நிகழும் நல்லதும் கெட்டதும் கலந்த சம்பவங்களை வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

Share this story