விமல் நடிக்கும் புதிய ஹாரர் படம் 'பெல்லடோனா'

vimal
விமல் நடிக்கும் 'பெல்லடோனா' படத்தை சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்க உள்ளார். 'பசங்க' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் விமல். 2010-ம் ஆண்டு வெளியான 'களவாணி' படம் இவருக்கு மிகப் பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. அதனை தொடர்ந்து வாகை சூட வா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் மஞ்சப்பை போன்ற படங்களில் நடித்தார் . சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான சார் படம் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது தனது 35-வது படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு 'பெல்லடோனா' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த படம் சூப்பர்நேச்சுரல் ஹாரர் கதைக்களத்தில் உருவாக உள்ளது. இப்படத்தை சந்தோஷ் பாபு முத்துசாமி இயக்க உள்ளார். மேலும் யூபோரியா பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளது. இந்தப் படத்தில் தேஜஸ்வினி ஷர்மா நாயகியாக நடிக்கிறார். ஒரு தனித்துவமான அனுபவத்தை உறுதியளிக்கும் வகையில் முற்றிலும் புதிய மற்றும் புத்துணர்ச்சியூட்டும் சினிமா பயணத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு இப்படம் உருவாக உள்ளது என படக்குழு தெரிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மற்றும் மணிப்பூரி உள்ளிட்ட 16 மொழிகளில் வெளியாகிறது. இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story