18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் வின்டேஜ் நடிகர்

18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் வின்டேஜ் நடிகர்

லியோ படத்திற்கு பிறகு விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தில் நடிக்க இருக்கிறார். தற்காலிகமாக தளபதி 68 என்று தலைப்படப்பட்டுள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க உள்ளது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்க இருக்கிறார்.  விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தில் மீனாட்சி சவுத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். சினேகா, லைலா, மைக் மோகன், விடிவி கணேஷ், ஜெயராம், பிரேம்ஜி, யோகி பாபு, வைபவ், அரவிந்த் ஆகாஷ், அஜ்மல் அமீர், பிரபுதேவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ், பூஜை வீடியோ வெளியானது. இந்த காணொலி வாயிலாகவே, படக்குழுவினரையும் தயாரிப்பு நிறுவனம் அறிமுகப்படுத்தியது. 

18 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் விஜய்யுடன் இணையும் வின்டேஜ் நடிகர்

இந்நிலையில், இத்திரைப்படத்தில் மலேசியா வாசுதேவனின் மகனும், நடிகருமான யுகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார். இவர், விஜய் நடித்த யூத், பகவதி, மதுர, திருப்பாச்சி, உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 18 ஆண்டுகளுக்கு பிறகு அவர் மீண்டும் சினிமாவுக்கு ரி என்ட்ரி கொடுக்கிறார்.

Share this story