அஜித், மஞ்சு வாரியார் உடன் இணையத்தைக் கலக்கும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!
அஜித் 61 படப்பிடிப்புத் தளத்திலிருந்து அஜித் மற்றும் மஞ்சு வாரியார் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களை அடுத்து எச்.வினோத், அஜித் மற்றும் போனி கபூர் கூட்டணி மூன்றாவது முறையாக புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். ஜிப்ரான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படத்தில் மலையாள நடிகை மஞ்சு வாரியார் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சமுத்திரக்கனி, வீரா, ஜான் கொக்கென், தெலுங்கு நடிகர் அஜய் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்புத் தளத்தில் அஜித், மஞ்சு வாரியார் மற்றும் புவனேஸ்வரி ஆகியோர் காணப்படும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகப் பரவி வருகின்றன. புகைப்படத்தில் அஜித் வெள்ளைத் தாடியுடன் மாஸாகக் காணப்படுகிறார். படத்தின் படப்பிடிப்பு தற்போது மஹாராஷ்டிராவில் நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் அஜித் இரட்டை கதாபாத்திரங்களில் அவரே கதாநாயகன் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்கிறாராம். வங்கிக் கொள்ளையை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகி வருகிறது.