"ரிதம் பட பாடல்கள் இன்றும் கொண்டாடப்படுகின்றன" -கவிஞர் வைரமுத்து

vairamuthu

கவிஞர் வைரமுத்து தமிழ் சினிமாவில் பல்லாயிரம் பாடல்களை படைத்துள்ளார் .அப்படி அவர் எழுதிய பாடல்கள் பல இன்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளன .அந்த வகையில் அவர் எழுதி ஹிட்டடித்த சில பாடல் பற்றி அவர் குறிப்பிட்டுள்ளார் .அது பற்றி நாம் இப்பதிவில் காணலாம் 
இயக்குநர் வசந்தின் இயக்கத்தில் கடந்த 2000 ஆம் ஆண்டில் வெளியான படம் 'ரிதம்'. இந்த படத்தில் அர்ஜூன், மீனா, ரமேஷ் அரவிந்த், ஜோதிகா, நாகேஷ் ஆகியோர் முக்கிய  கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இந்த படம் இன்றைக்கும் மறக்க முடியாத படமாக உள்ளது.இந்த படத்தில் இடம் பெற்றுள்ள 5 பாடலுக்கும் வைரமுத்து பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த ரிதம் படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தளத்தில் இது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கால் நூற்றாண்டு கழிந்தபின்னும் ரிதம் படப் பாடல்கள் கொண்டாடப்படுவதைப் புன்னகையோடு பார்க்கிறேன் இசை மொழிக்கு அழகு தருகிறது மொழியோ இசைக்கு ஆயுள் தருகிறது ஐந்து பாடல்களுக்கும் ஐம்பூதங்களை உள்ளடக்கமாக்கியவர் இயக்குநர் வசந்த்; நல்லிசை நல்கியவர் ஏ.ஆர்.ரகுமான்"

Share this story