விஷால் 34-ல் இணைந்த பிரபல இசையமைப்பாளர்... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !
விஷாலின் 34-வது படத்தில் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'மார்க் ஆண்டனி' படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. விஷாலின் 34 வது படமாக உருவாகும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர்.
இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதோடு நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்திற்கான ப்ரோமோ ஷூட் இன்று தொடங்க உள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த ஷூட் முடிந்து வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் முழு ஷூட்டிங் தொடங்குகிறது. தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களில் இந்த படத்திற்கான ஷூட்டிங் நடைபெற உள்ளது. இந்நிலையில் இப்படத்தில் பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வரும் டிஎஸ்பி நிச்சயம் விஷாலுக்காக சம்பவம் செய்வார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.