‘விஷால் 34’ திரைப்படத்தில் இணைந்த பிரபலம் –லேட்டஸ்ட் அப்டேட்.

photo

நடிகர் விஷால் மற்றும் நடிகை பவானி ஷங்கர் இணைந்து நடிக்கும் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.

photo

டைம் டிராவல் கதைக்களத்தில் நடிகர் விஷால் மற்றும் எஸ். ஜே சூர்யா இணைந்து நடித்த ‘மார்க் ஆண்டனி’ படம் சமீபத்தில் வெளியாகி வசூலில் பட்டையை கிளப்பியது. குறிப்பாக 100 கோடி வசூலை  கடந்த விஷாலின் முதல் படம் என்ற சாதனையை படைத்தது. தொடர்ந்து நடிகர் விஷால் இயக்குநர் ஹரி உடன் கூட்டணி அமைத்து அவரது 34வது படத்தில் நடித்து வருகிறார். இது இவர்கள் 3ஆவதாக கூட்டணி அமைக்கும் படமாகும்.  இந்த படத்தை ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து  தயாரிக்கின்றனர். இந்த படத்தின் பூஜை கடந்து ஜூலை மாதம் துவங்கப்பட்ட நிலையில் தற்போது படத்தில் பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் இணைந்துள்ளார்.

photo

படத்தில் ஸ்டண்ட் இயக்குநராக  திலீப் சுப்புராயன் பணியாற்றி வந்த நிலையில் தற்போது கிளைமேக்ஸ் காட்சிக்காக கனல் கண்ணன் இணைந்துள்ளார்.

Share this story