‘மூக்குத்தி அம்மன் 2’படத்திற்கு பிறகு சுந்தர் சி இயக்கும் படம் -யார் ஹீரோ தெரியுமா ?
1767234607000
நயன்தாரா நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற படத்தை இயக்கி வரும் சுந்தர்.சி, பிறகு விஷால் நடிக்கும் படத்தை இயக்குகிறார். தற்போது விஷால் ‘மகுடம்’ என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்கு முன்பு சுந்தர்.சி இயக்கியிருந்த ‘ஆம்பள’, ‘ஆக்ஷன்’, ‘மதகஜராஜா’ ஆகிய படங்களில் விஷால் நடித்திருந்தார். தற்போது அவர்கள் 4வது முறை இணைகின்றனர். சுந்தர்.சி, குஷ்புவின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கும் இப்படத்துக்கு ‘ஹிப்ஹாப்’ தமிழா ஆதி இசை அமைக்கிறார். இதில் விஷால் ஜோடியாக தமன்னா, கயாடு லோஹர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது

