மீண்டும் இணைந்த 'தாமிரபரணி' கூட்டணி... விஷால் - ஹரி படத்தின் அப்டேட் !

vishal 34

 அதிரடி இயக்குனரான ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தாமிரபரணி’. குடும்ப கதைக்களத்தை கொண்டு ஆக்‌ஷன் அதிரடி திரைப்படமாக உருவான இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் பானு, பிரபு, நதியா, நாசர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். நடிகர் விஷாலுக்கு நல்ல ஓபனிங் கொடுத்த படமாக இந்த படம் அமைந்தது. 

vishal 34

இந்த படத்தின் வெற்றியையடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ளார்.  முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியானது. விஷாலின் 34 வது படமாக உருவாகும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். 

vishal 34

இந்நிலையில் இப்படத்தின் தொடங்கி விழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

Share this story