விஜய் ஆண்டனி கச்சேரியில் வைப் செய்த விஷால்... அன்புக்கும் ஆதரவிற்கும் மீண்டும் நன்றி என நெகிழ்ச்சி பதிவு

vishal

நடிகர் விஷால் இசைக்கச்சேரியில் நடனமாடும் வீடியோ வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், ஆதரவு அளித்த ரசிகர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார். 


சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான ‘மதகஜராஜா’ திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்தப் படத்துக்கு விஜய் ஆண்டனி இசையமைத்துள்ளார். இதில் விஷால் ‘மை டியர் லவ்வரு’ பாடலை பாடியுள்ளார். இந்நிலையில்,  சென்னை நந்தனத்தில் நேற்று இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் 3.0 இசை கச்சேரி நடைபெற்றது. இதில் விஷால் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் நடனமாடியபடி, உற்சாகமாக காணப்பட்ட விஷால்,  ‘மை டியர் லவ்வரு’ பாடலை பாடினார் .  இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இதுதொடர்பாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து விஷால் ஒரு பதிவிட்டுள்ளார்.


அதில், ஒய்எம்சிஏ நந்தனத்தில் இசை கச்சேரி நடைபெற்ற இந்த இடத்தில் பல நினைவுகள் உள்ளன. அந்த வகையில், முதலமைச்சர் முக ஸ்டாலின், துணை முதலமைச்சர் என் நண்பர் உதயநிதி ஸ்டாலின் உடனுடன் கிரிக்கெட் விளையாடி உள்ளேன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் கவுன்சிலின் தலைவராக இளையராஜா 75 நிகழ்ச்சியை வெற்றிக்கரமாக நடத்தியுள்ளேன். ஆனால், இந்த இடத்தில், எனது முதல் கச்சேரியில் பாடுவேன் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், எனது முதல் இசை கச்சேரியை  மறக்க முடியாத அனுபவமாக மாற்றிய ரசிகர்களுக்கும், கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன் எனவும், "மை டியர் லவ்வர்-யு" பாடலை 12 ஆண்டுகளுக்குப் பிறகு சூப்பர் வெற்றியாக மாற்றியதற்கு நன்றி எனவும் தெரிவித்துள்ளார். 



 

Share this story