5 நிமிடத்தில் ஒரே ஷாட்டில் சண்டைக் காட்சியை நிறைவு செய்த விஷால்

5 நிமிடத்தில் ஒரே ஷாட்டில் சண்டைக் காட்சியை நிறைவு செய்த விஷால்

ஸ்டோன் பெஞ்சர்ஸ் மற்றும் ஜி ஸ்டுடியோஸ் இணைந்து தாயாரிக்கும் படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார். இந்த படம் விஷாலின் 34வது படமாக தயாராகி வருகிறது. இது இவர்களது மூன்றாவது கூட்டணியாகும் இதற்கும்  முன்னர் தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களில் விஷால் மற்றும் ஹரி ஒன்றாக பணியாற்றியுள்ளனர். இந்த படத்திற்கு ‘ரத்னம்’ என பெயரிட்டுள்ளனர். இதில், விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கௌதம் மேனன், சமுத்திரக்கனி, மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ரத்னம் படத்தில் 5 நிமிட சண்டைக் காட்சி ஒரே ஷாட்டில் எடுத்து முடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் மேக்கிங் வீடியோ விரைவில் வௌியிடப்படும் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். 
 

Share this story