“ஒரு பாதி உண்மை….”- வைரல் வீடியோ குறித்து விஷால் விளக்கம்.

photo

நடிகர் விஷால் வெளிநாட்டில் பெண் ஒருவருடன் வலம் வரும் வீடியோ வெளியாகி வைரலான நிலையில், தற்போது அந்த வீடியோ குறித்து விளக்கம் கொடுத்துள்ளார் விஷால்.

photo

சண்டகோழி, திமிரு, சத்யன், அவன் இவன், தாமிரபரணி, துப்பறிவாளன் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் நடிகர் விஷால். சமீபத்தில் கூட இவர் நடித்த மார்க் ஆண்டனி படம் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. சினிமாவை கடந்து பொது வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு கொண்ட விஷால் சமீபத்தில் ஒரு பெண் உடன் நியூயார்க் நகரில் உலா வருவதாக வீடியோவுடன் செய்தி பரவியது அதற்கு விளக்கம் கொடுத்துள்ளார் விஷால்.


 

அவர் வெளியிட்டுள்ள பதிவில்” மன்னிக்கவும், சமீபத்தில் பரவிய வீடியோ குறித்த உண்மையை கூற வேண்டிய நேரம் இது, அதில் பாதி உண்மை உள்ளது. நான் நியூயார்க்கில் இருக்கிறேன் வருடத்திற்கு ஒரு முறை குடும்பத்துடன் அங்க சென்று நேரம் செலவிடுவது வழக்கம். அந்த வீடியோ கிறிஸ்துமச் தினத்தில் விளையாட முடிவு செய்து எடுக்கப்பட்ட வீடியோ. அது வைரலாகி விட்டது” என கூறி வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்துள்ளார்.   

Share this story