விஷால் தயாரிப்பு நிறுவனத்திற்கு திடீர் ?.. சென்னை நீதிமன்றம் அதிரடி உத்தரவு !

நடிகர் விஷால் உடனடியாக லைக்கா நிறுவனத்திற்கு 15 கோடி ரூபாய் செலுத்த சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரபல நடிகராக இருக்கும் விஷால், தயாரிப்பு நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருகிறார். அவரது தயாரிப்பு நிறுவனத்திற்காக பிரபல பைனான்சியர் அன்புசெழியனிடம் 21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கியிருந்தார். அதை திருப்பி கட்ட முடியாத நிலையில் விஷாலுக்காக அந்த பணத்தை லைக்கா செலுத்தியது. ஆனால் லைக்காவிற்கு அந்த தொகையை விஷால் கொடுக்காத நிலையில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு கடந்த ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற விசாரணையில் தனக்கு 18 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், அந்த கடனை அடைக்கவே படத்தில் நடித்து வருகிறேன் என்று விஷால் கூறியிருந்தார். அப்போது விஷாலின் சொத்து விபரங்களை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்பிறகு இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது சொத்து விபரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷால் கால அவகாலம் கேட்டார். இதை ஏற்காத நீதிபதி, லைக்கா நிறுவனத்திற்கு கொடுக்க வேண்டிய 21.29 கோடியில் முதலில் 15 கோடியை வங்கியில் செலுத்தவேண்டும் என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து விஷால் மேல் முறையீடு செய்தார். அதை இன்று விசாரித்த நீதிமன்றம், 15 கோடியை வங்கி கணக்கில் செலுத்தும் தனி நீதிபதியை உத்தரவை மீண்டும் உறுதி செய்தார். அப்படி செலுத்தாத பட்சத்தில் விஷால் பிலிம் பேக்டரி தயாரிக்கும் படத்திற்கு திரையரங்கு மற்றும் ஓடிடியில் வெளியிட உத்தரவு பிறப்பித்தார். இது விஷால் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.