“எங்களுக்கு கல்யாணமே ஆகல, நான் காசிக்கு போறேன்”- விஷாலின் திடீர் முடிவு:

விஷால்

ஒரு புறம் திருமண செய்தி வைரலாக பரவ ,மற்றொரு புறம் நடிகர் விஷால் காசிக்கு சென்றுள்ளார்.

விஷால்

கடந்த சில நாட்களாக சமூக வலைதளத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் விஷால் அபிநயா திருமண விவகாரம். ஒரு வழியாக இந்த விவகாரத்திற்கு அபிநயா விளக்கம் கொடுத்து முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தற்பொழுது விஷாலின் காசிப்பயணம் கவனம் பெற்றுள்ளது.

விஷால்

சமீபகாலமாக விஷால் நடித்த  படங்கள் ரசிகர்கள் மத்தியில்  எதிர்பார்த்த  வரவேற்பை பெறவில்லை , இதனால் தனது  அடுத்த படத்தில் எப்படியாவது ஹிட் கொடுக்க வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இதற்காகவே விஷால் தனது முழு உழைப்பையும் செலுத்தி ‘லத்தி’ படத்தில் நடித்துள்ளார். விஷால் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் லத்தி படத்தின்  டீசர் மற்றும் டிரைலர் வெளியான ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படம் விரைவில் வெளியாக உள்ளது.

ஃப்க்

இந்நிலையில்,நடிகர் விஷால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காசிக்கு சென்றுள்ள வீடியோவை பகிர்ந்துள்ளார். நடிகர் விஷாலுடன், அவரது நெருங்கிய நண்பரான  நந்தா மற்றும் குடும்பத்தினர் பனாரஸ் தெருக்களில் உள்ள கோவில்களிலும் சாமி தரிசனம் செய்துள்ளனர். இதை தொடர்ந்து திடிரென எதற்காக  அவர் காசிக்கு சென்றார்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

​​

Share this story