விஷால் - ஹரி கூட்டணியில் புதிய படம்... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு...

விஷால் - ஹரி கூட்டணியில் புதிய படம்... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு...

மார்க் ஆண்டனி படத்தைத் தொடர்ந்து தனது 34-வது படத்தில் விஷால் நடிக்கிறார். இயக்குநர் ஹரி, விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தை தற்போது இயக்கி வருகிறார். இதில் பிரியாபவானி சங்கர் அவர் ஜோடியாக நடிக்கிறார். இப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கின்றன. இயக்குநர் கவுதம் மேனன், சமுத்திரக்கனி ஆகியோர் ஒப்பந்தம் ஆகியுள்ளனர்.

விஷால் - ஹரி கூட்டணியில் புதிய படம்... இரண்டாம் கட்ட படப்பிடிப்பு நிறைவு...

இதன் முதல்கட்ட படப்பிடிப்பு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்தது. இந்நிலையில் இந்தப் படத்தின், இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நிறைவு பெற்றதாக விஷால் தெரிவித்துள்ளார். புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

Share this story