'அடங்க மறு' பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும் விஷால்!?

vishal-and-karthik

நடிகர் விஷால் இயக்குனர் கார்த்திக் தங்கவேலு உடன் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. 

விஷால் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘எனிமி‘ படத்தில் நடித்துள்ளர். அந்தப் படத்தில் ஆர்யா விஷாலுக்கு வில்லனாக நடிக்கிறார். படத்தை ஆயுத பூஜை விடுமுறையில் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர். 

அதையடுத்து இயக்குனர் துபா சரவணன் இயக்கத்திலும் விஷால் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்திற்கு 'வீரமே வாகை சூடும்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது அவரது 31-வது படம். 

vishal

பின்னர் அறிமுக இயக்குனர் வினோத் என்பவருடன்விஷால் கூட்டணி அமைத்துள்ளார். அந்தப் படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. 

இந்நிலையில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற ‘அடங்க மறு’ படத்தின் இயக்குனர் கார்த்திக் தங்கவேல் உடன் விஷால் கூட்டணி அமைக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பொல்லாதவன், ஆடுகளம் உள்ளிட்ட படங்களை தயாரித்த பைவ் ஸ்டார் கதிரேசன் இந்தப் படத்தை தயாரிக்க உள்ளாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

Share this story