வெறித்தனமாக லுக்கில் விஷால்... 'லத்தி' ரிலீஸ் தேதி அறிவிப்பு !

laththi

கிறிஸ்துமஸ் பண்டிகையை 'லத்தி' திரைப்படம் வெளியாகும் என விஷால் அறிவித்துள்ளார். 

 விஷால் நடிப்பில் உருவாகி வரும் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘லத்தி’. இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்து வருகிறார். த்ரில்லர் போலீஸ் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கி வருகிறார். இந்த படத்தில் சி.முருகானந்தம் என்ற கதாபாத்திரத்தில் விஷால் நடித்து வருகிறார். 

laththi

யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோரது ராணா பிலிம் புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. கீழ்நிலை காவலராக இருக்கும் ஒரு மனிதன், தனது மகனை எப்படி காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.

ஏற்கனவே இப்படம் ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இரண்டு முறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஷால் வெளியிட்டுள்ளார். 

 

Share this story