யுவன் இசையில் உருவாகியுள்ள ‘ஊஞ்சல் மனம்’... விஷாலின் ‘லத்தி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு !

laththi

 விஷாலின் ‘லத்தி’ படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

அறிமுக இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘லத்தி’. போலீஸ் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கீழ்நிலை காவலராக விஷால் நடித்துள்ளார். தனது மகனை காப்பாற்றும் சாதாரண அப்பாவின் கதைதான் இப்படம். 

laththi

விஷாலின் நண்பர்களான நந்தா மற்றும் ரமணா ஆகியோரது ராணா பிலிம் புரொடக்ஷ்ன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகிறது. இந்த படத்தில் நடிகை சுனைனா கதாநாயகியாக நடித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

laththi

இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகவிருந்தது. ஆனால் சில காரணங்களால் இன்னும் வெளியாகவில்லை. தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஊஞ்சல் மனம்’ என்று தொடங்கும் பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. கார்த்திக் நேத்தா எழுதியுள்ள இந்த பாடலை யுவன், ரஞ்சித் கோவிந்த் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. 

 

Share this story