இரட்டை வேடங்களில் கலக்கும் விஷால்... ‘மார்க் ஆண்டனி’ சுதந்திர தின மிரட்டல் போஸ்டர் !
சுதந்திர தினத்தையொட்டி விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி‘ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் மார்க் ஆண்டனி. இந்த படத்தில் விஷால் மற்றும் எஸ்ஜே. சூர்யா ஆகிய இருவரும் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இரண்டு காலக்கட்டங்களில் உருவாகியுள்ள இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். முதல் முறையாக டைம் டிராவல் கேங்ஸ்டர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.
சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் கடந்த ஜூலை 28-ஆம் தேதியே திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பணிகள் நிறைவுபெறாததால் குறிப்பிட்ட தேதியில் வெளியாகாது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படம் விநாயகர் சதுர்த்தியையொட்டி வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி புதிய ரிலீஸ் தேதியுடன் சுதந்திர தின ஸ்பெஷல் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.