விவசாயிகளை சந்தித்து குறைகளை கேட்ட விஷால்
'மார்க் ஆண்டனி' படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. விஷாலின் 34 வது படமாக உருவாகும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து, படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அண்மையில் விஷால் அறிவித்தார்.
nullமுதல்ல சாப்பிடுங்க.. மத்ததெல்லாம் அப்புறம் பாத்துக்கல்லாம்..
— FridayCinema (@FridayCinemaOrg) November 15, 2023
விவசாயிகளிடம் கண்டிப்பாக நடந்த விஷால்!
திருச்சியில் நடைபெற்று வரும் விஷால்34 படப்பிடிப்பில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் நடிகர் விஷால் அவர்களை சந்தித்தபோது விவசாயிகளின் பிரச்சனைகள்… pic.twitter.com/ydecR3P8HW
இந்நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு வேலூரில் நடைபெற்று வரும் நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் சிலர் விஷாலை நேரில் சந்தித்து தங்கள் பிரச்சனைகளை கூறினர்.