“எல்லாமே அவர் கையில் தான் உள்ளது”- விஜய்யின் அரசியல் கட்சியில் இணையப்போவது குறித்து விஷால் பதில்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது நமக்கு ஒன்றும் புதிதல்ல அந்த வரிசையில் ரஜினிகாந்திற்கு அடுத்தபடியாக தற்போது நடிகர் விஜய்யின் அரசியல் வருகையை எதிர்நோக்கி தமிழகமே காத்துள்ளது. சமீபகாலமாக விஜய்யின் நகர்வுகளும் அரசியலை குறிவைத்தே இருப்பதால் விரைவில் அவர் ஒரு கட்சிதொடங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் இணைவது குறித்து நடிகர் விஷால் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார். அதே போல நடிகர் விஷாலும் மாணவர்களை சந்தித்து பேச்சுவார்தை நடத்தினார். அப்போது விஷாலிடம் மாணவி ஒருவர் “ விஜய் அரசியல் கட்சி தொடங்கினால் அதில் நீங்கள் இணைவீர்களா?” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதிலளித்த விஷால்” எல்லாமே இறைவன் கையில்தான் உள்ளது. அரசியல் என்பது வியாபாரம் அல்ல; அது ஒரு சமூகசேவை, நாம் அனைவருமே அதனுள்தான் இருக்கிறோம்.” என பதிலளித்துள்ளார். விஷாலின் இந்த பதில் மூலமாக விஜய் அரசியல் கட்சி துவங்கினால் அதில் அவர் இணைய அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.