‘மார்க் ஆண்டனி’ வெற்றி : நெகிழ்ந்து போய் வீடியோ பதிவிட்ட 'விஷால்'.

photo

‘மார்க் ஆண்டனி’  படத்தின் வெற்றியால் நெகிழ்ந்துப்போன நடிகர் விஷால் அனைவருக்கு நன்றி தெரிவித்து வீடியோ பதிவிட்டுள்ளார்.

photo

நடிகர் விஷால், எஸ். ஜே சூர்யா இணைந்து நடித்து, மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ள படம்  ‘மார்க் ஆண்டனி’.  இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக  நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தை ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்கேங்ஸ்டர், காமெடி, டைம் டிராவல் என வித்தியாசமான கதைகளம் கொண்ட இந்த படத்தில் ரித்து வர்மா, தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

படம் தியேட்டரில் வெளியாகி சக்கைபோடு போட்டுவரும் நிலையில் படத்தை வெற்றி பெற வைத்த அனைவருக்கு நன்றி தெரிவித்து  வீடியோ வெளியிட்டுள்ளார் நடிகர் விஷால், அந்த வீடியோவில் “ படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துகொண்டிருகிறது, படத்தை பார்க்கும் அனைத்து ரசிகர்களுள் திருப்தியோடு திரும்புவார்கள் என நம்புகிறேன். இரண்டு வருட உழைப்பு தற்போது படம் பிளாக் பஸ்டர் ஹிட்டானதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. படத்தை ப்ரோமோட் செய்த டார்லிங் கார்த்தி, டார்லிங் வெங்கட் பிரபு, டார்லிங் சிம்பு அனைவருக்கும் நன்றி. நான் ஏற்கனவே கூறியபடி படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாய் எடுத்து அனைத்து விவசாயிகளிடம் கொடுப்பேன்” என அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார்.   

Share this story