விஷால் படத்தை தொடங்கும் அதிரடி இயக்குனர்.. எப்போது தெரியுமா ?

vishal 34

விஷால் - ஹரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

 தனது அதிரடி திரைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் ஹரி. அவரின் அடுத்த படைப்பை நடிகர் விஷாலை வைத்து உருவாக்கவுள்ளார். ஏற்கனவே தாமிரபரணி, பூஜை ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது.  அதனால் இந்த கூட்டணியில் உருவாகும் படத்திற்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 

 vishal 34

விஷாலின் 34வது படமாக உருவாகும் இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கவுள்ளனர். இந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. இந்த படம் வித்தியாசமான போலீஸ் கதைக்களத்தில் உருவாகவுள்ளது.

vishal 34

இந்த படத்தில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும், சமுத்திரக்கனி முக்கிய வேடத்திலும் நடிக்கவுள்ளனர்.  தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கடந்த மாதமே இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருந்த நிலையில் சில காரணங்களால் தொடங்கவில்லை. இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 11-ஆம் தேதி தூத்துக்குடியில் தொடங்கவுள்ளது. 

 

 

Share this story