டைம் டிராவல் கதையில் கேங்ஸ்டர் படம்... விஷாலின் 'மார்க் ஆண்டனி' ரிலீஸ் தேதி !

mark antony

 விஷால் நடிப்பில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. 

நடிகர் விஷால் மற்றும் இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா முதல் முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. டைம் டிராவல் கதையில் முதல்முறையாக கேங்ஸ்டர் படமாக உருவாகியுள்ள இந்த ஆதி ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார்.  

mark antony

இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன், ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ளது.  இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகியுள்ளது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 28-ஆம் தேதி உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ளது.  

Share this story