துப்பாக்கியுடன் மிரட்டலாக ‘மார்க் ஆண்டனி’... விஷால் படத்தின் டீசர் அறிவிப்பு !

mark antony

 விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘மார்க் ஆண்டனி’ படத்தின் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மார்க் ஆண்டனி’. இந்த படம் ஒரு ப்ரீயட் படமாக உருவாகி வருகிறது. அதாவது 1970-களில் நடப்பது போன்று காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. திரிஷா இல்லன்னா நயன்தாரா, பஹிரா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

mark antony

மினி ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக ரித்து வர்மா நடித்து வருகிறார். இவர்களுடன் தெலுங்கு நடிகர் சுனில், செல்வராகவன்,  ஓய்.ஜி.மகேந்திரன், ரெடின் கிங்ஸ்லி, அபிநயா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். 

தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதையடுத்து உடனடியாக தயாரிப்பு பணிகள் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் டீசர் ஏப்ரல் 27-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

Share this story