சல்மான்கான் திருமணத்திற்கு பிறகு தான் எனது திருமணம் - விஷால்

சல்மான்கான் திருமணத்திற்கு பிறகு தான் எனது திருமணம் -  விஷால்

சல்மான்கான் திருமணத்திற்கு பிறகு தான் தனக்கு திருமணம் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுனில், செல்வராகவன், ரிது வர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அந்த வகையில், நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். அப்போது, அவரிடம் திருமணம் குறித்து கேள்வி அனுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த விஷால், சல்மான்கான் திருமணம் செய்யட்டும், அதன் பிறகு நான் திருமணம் செய்கிறேன் என்று கூறியுள்ளார்.

சல்மான்கான் திருமணத்திற்கு பிறகு தான் எனது திருமணம் -  விஷால்

விஷாலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவைச் சேர்ந்த ஒரு பெண்ணோடு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் அவரது திருமணம் நின்று போனது குறிப்பிடத்தக்கது.

Share this story