விஷால் 34 படத்திற்கு ரத்தினம் என தலைப்பு
'மார்க் ஆண்டனி' படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. விஷாலின் 34 வது படமாக உருவாகும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து, படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அண்மையில் விஷால் அறிவித்தார். படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார்.
தற்போது இந்த படத்திற்கு ரத்தினம் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்று மாலை படத்தின் முதல் தோற்றம் வெளியாக உள்ளது.