விஷால் செய்த சம்பவம்... இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்...

விஷால் செய்த சம்பவம்... இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்...

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமன்றி தயாரிப்பளர் சங்க தலைவராகவும் அவர் பதவி வகித்து வருகிறார். இதுமட்டுமன்றி தமிழ் சினிமாவில் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அண்மையில் அவரது நடிப்பில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் ஈட்டியது. இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார். 

விஷால் செய்த சம்பவம்... இந்தி சென்சாரில் அதிரடி மாற்றம்...

இதனிடையே, இந்தியில் படத்தை வெளியிட சென்சார் சான்றிதழ் வாங்க விஷால் மும்பை சென்று இருந்தார். அங்கு சென்சார் அலுவலகத்தில் விண்ணப்பிக்கும்போது, அதிகாரிகள் அவரிடம் லஞ்சம் வாங்கியதாக குற்றம் சாட்டியிருந்தார். இதை கண்டித்த நடிகர் விஷால், பிரதமர் மற்றும் மராட்டிய மாநில முதல்வரிடம் சமூக வலைதளங்களில் புகார் அளித்து வீடியோ ஒன்றையும் பதிவிட்டிருந்தார். 

null

இதைத் தொடர்ந்து, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த ஒன்றிய அரசு, அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்தது. தற்போது, இந்தியில் தமிழ் படத்தை வெளியிடுவதற்கான சான்றிதழை தமிழ்நாட்டிலேயே பெற்றுக்கொள்ளலாம் எனவும் அதிரடி அறிவிப்பை வௌியிட்டுள்ளது. 

Share this story