விஷால் படப்பிடிப்பு தளத்தில் களைகட்டிய கறி விருந்து

'மார்க் ஆண்டனி' படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். தாமிரபரணி, பூஜை ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக இந்த கூட்டணி இணைந்துள்ளது. விஷாலின் 34 வது படமாக உருவாகும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றனர். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அதைத் தொடர்ந்து, படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாகவும் அண்மையில் விஷால் அறிவித்தார்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு படப்பிடிப்பு தளத்தில் சமபந்தி கறி விருந்து அளித்த நடிகர் விஷால்....
— RIAZ K AHMED (@RIAZtheboss) November 12, 2023
இயக்குநர் ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி வரும் #vishal34 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மிகத் தீவிரமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் திபாவளி தினமான இன்றும்… pic.twitter.com/Hwn1b9Lf7m
இந்நிலையில், தீபாவளி பண்டிகையை ஒட்டி படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஷால் படக்குழுவினர் அனைவருக்கும் கறி விருந்து வைத்துள்ளார். இதனால், படக்குழுவினர் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்