பூஜையுடன் தொடங்கிய விஷ்ணு விஷாலின் ‘ஆர்யன்’... தொடக்கவிழா நிகழ்வின் புகைப்படங்கள் !
விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகும் ‘ஆர்யன்’ படத்தின் தொடக்கவிழா இன்று நடைபெற்றது.

‘எம்.ஐ.ஆர்’ படத்தின் வெற்றிக்கு தற்போது ‘கட்ட குஸ்தி’ படத்தில் நடித்து வருகிறார். செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது. இந்த படத்திற்கு தனது மகன் பெயரான ‘ஆர்யன்’ என்பதை தலைப்பாக வைத்துள்ளார்.

க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தை பிரவீன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இயக்குனர் செல்வராகவன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் வாணிபோஜன் ஆகிய இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர். சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது. விஷ்ணு விஷாலின் விவி ஸ்டுடியோ தயாரிக்கும் இப்படத்தில் போலீசாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.

இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் உருவாகி வெளியாகவுள்ளது. நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் படப்பூஜை நிகழ்ச்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது. இந்த படப்பூஜையில் விஷ்ணு விஷால், செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணிபோஜன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

