விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாகும் பிரபல இயக்குனரின் மகள்... ராம்குமார் படத்தின் முக்கிய அப்டேட் !

Vishnu vishal

விஷ்ணு விஷாலின் புதிய படத்தில் பிரபல இயக்குனரின் மகள் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‌ 2018-ம் ஆண்டு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான 'ராட்சசன்' திரைப்படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அந்தப் படத்தில் அமலா பால் கதாநாயகியாக நடித்திருந்தார். விஷ்ணு விஷாலின் சினிமா கேரியரில் மிக முக்கிய படமாக அமைந்தது ராட்சசன். இந்தியாவின் மிகச்சிறந்த சைக்கோ த்ரில்லர் படமாக இப்படம் அமைந்தது. 

Vishnu vishal

இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மீண்டும் நடிக்கவுள்ளார். விஷ்ணு விஷாலின் 21வது படமாக உருவாகும் இந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கவுள்ளதாக கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த படம் காதல், காமெடி கலந்த ஃபேண்டஸி கதைக்களத்தில் உருவாகிறது. 

Vishnu vishal

இந்நிலையில் இப்படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தற்போது இப்படத்தின் டெஸ்ட் ஷூட்டிங் மற்றும் ப்ரோமோ தொடர்பான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  இதையடுத்து வரும் மே முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. இந்த படப்பிடிப்பு மலை சார்ந்த பகுதி ஒன்றில் படமாக்கப்பட உள்ளது.  ‌ 

Share this story