இளம் சாதனையாளர்களை அழைத்து ஊக்கப்படுத்திய விஷ்ணு விஷால்.. மகிழ்ச்சியில் திளைத்த வீரர்கள் !

vishnu vishal

 விளையாட்டில் சாதனை புரிந்து வரும் இளம் விளையாட்டு வீரர்களுக்கு நடிகர் விஷ்ணு விஷால் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளார். 

விளையாட்டில் சாதனை புரிந்து வரும் இளம் சாதனையாளர்களை கண்டறிந்து அவர்களுக்கு உதவி வருகிறார் நடிகர் விஷ்ணு விஷால். விளையாட்டின் மீது அதிகம் ஆர்வம் கொண்ட அவர். சாதனை புரிந்த  11 இளம் தடகள வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உதவி செய்துள்ளார். அதோடு பல்வேறு உதவிகளை மாதந்தோறும் வழங்குவதாகவும் கூறியுள்ளார். 

vishnu vishal

அந்த வகையில் போல் வால்ட் எனப்படும் கோலூன்றி தாண்டுதலில் அகில இந்திய அளவில் பல்கலைக்கழங்களுக்கான போட்டிகளின் சாதனை படைத்த தீனதயாளன், ஈ​ட்டி எறிதலில் தேசிய அளவில் சாதனை படைத்த ஹேமமாலினி, 100 மீ மற்றும் 200 மீ தடகள வீரரான அருண்குமார் மற்றும் சந்தோஷ், பல்கலைக் கழகங்களுக்கு இடையிலான நடைபெற்ற டெகாத்லான் போட்டி சாம்பியனான ஸ்டாலின் ஜோஸ் உள்ளிட்ட சமீபகாலமாக சாதனை புரிந்துள்ளனர்.

மேலும் 400 மீ தடகள போட்டியில் பல்கலைக்கழக சாம்பியனான திவ்யா, நீண்ட ஓட்டங்களின் சாதனையாளர்களான எம்.ஆர்.மித்ரா, வி.பி.அருண் கிருஷ்ணா, எம். ஷியாம் குமார் உள்ளிட்ட 11 பேர் சாதனை புரிந்துள்ளனர். இவர்களை நேரில் அழைத்த விஷ்ணு விஷால், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக கூறி பல்வேறு யோசனைகளை பகிர்ந்துள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

 

Share this story