படக்குழுவினருடன் பிறந்தநாள் கொண்டாடிய விஷ்ணு விஷால்... ‘லால் சலாம்’ முக்கிய அப்டேட்

vishnu vishal

படக்குழுவினர் நடிகர் விஷ்ணு விஷால் பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

vishnu vishal

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘லால் சலாம்’. இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இவர்களுடன் காமெடி நடிகர் செந்தில், தம்பி ராமையா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

vishnu vishal

மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் இந்த படத்தில் நடித்துள்ளார்.கிரிக்கெட் கதைக்களத்தை கொண்டு உருவாகும் இந்த படத்தில் பயிற்சியாளராக நடித்து வருவதாக கூறப்படுகிறது. அதோடு பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்‌.ரகுமான் இசையமைத்து வருகிறார்.  

vishnu vishal

லைக்கா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடிகர் ரஜினிகாந்த் தனது பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார். இதையடுத்து மற்ற காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. அதில் நேற்றுடன் ஒரு ஷெட்யூலை படக்குழுவினர் நிறைவு செய்துள்ளனர். அதோடு விஷ்ணு விஷால் பிறந்தநாளையொட்டி கேக் வெட்டி படக்குழுவினருடன் கொண்டாடிய புகைப்படங்களும் வெளியாகியுள்ளது. இதுதவிர ‘லால் சலாம்’ படத்தில் திருநாவுக்கரசு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஷ்ணு விஷாலின் போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story