விஷ்ணு விஷால் படத்தை வெளியிடும் உதயநிதி... அதிகாரப்பூர்வ அறிவிப்பு !

gattakusthi

விஷ்ணு விஷாலின் 'கட்டா குஸ்தி' படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஷ்ணு விஷால். அதனால் இந்த படத்தை விஷ்ணு விஷால் மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வெளியிடுகின்றனர்.

gattakusthi

மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். அதனால் இந்த படத்திற்கு ‘கட்டா குஸ்தி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. செல்லா அய்யாவு இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ஐஸ்வர்ய லட்சுமியும், கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வரும் இப்படம் வரும் டிசம்பர் 2-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதற்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே இ

Share this story