குஸ்தி வீரராக களமிறங்கும் விஷ்ணு விஷால்... ‘கட்டா குஸ்தி’ ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

gattakusthi

விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் ‘கட்டா குஸ்தி‘ படத்தின்  ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. 

விஷ்ணு மற்றும் தெலுங்கு நடிகர் ரவி தேஜா இணைந்து தயாரித்து வரும் திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தை செல்லா அய்யாவு  இயக்கி வருகிறார்.  மல்யுத்தத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தில் குஸ்தி வீரராக விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். 

gattakusthi

இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரில் மல்யுத்த போட்டிக்கு தயாராகும் லுக்கில் விஷ்ணு விஷால் தோன்றுகிறார். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த படத்தின் போஸ்டர் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Share this story