விஷ்ணு விஷால்- மமிதா பைஜு படத்தின் டைட்டில் அறிவிப்பு..

VISHNU VISHAL

நடிகர் விஷ்ணு விஷால், மமிதா பைஜு நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. 

 

முண்டாசுப்பட்டி' மற்றும் 'ராட்சசன்' பட இயக்குனர் ராம் குமார் மீண்டும் விஷ்ணு விஷால் உடன் இணையவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இந்த படத்தில் மலையாள திரையுலகில் நடிகையாக அறிமுகமாகி, 'பிரேமலு' படத்தின் மூலம் பிரபலமான மமிதா பைஜு. நிதிப்பதாகவும் அரவிக்கப்பட்டது.  மமிதா பைஜு தமிழ் சினிமாவில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ’ரெபல்' படத்தில் அறிமுகமானார். தற்போது விஜய்யின் 'ஜன நாயகன்' படத்திலும் நடித்து வருகிறார். 


இந்நிலையில், இயக்குனர் ராம் குமாருடன் 3-வது முறையாக விஷ்ணு விஷால் இணைந்திருக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு இரண்டு வானம் என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்திற்கு திபு நினனன் தாமஸ் இசையமைக்கிறார். 

Share this story