நேரடியாக ஓடிடியில் வெளியாகும் விஷ்ணு விஷால் படம்... நீண்ட நாட்களுக்கு பிறகு காத்திருந்த அதிர்ச்சி !

Mohandas

 விஷ்ணு விஷாலின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான மோகன்தாஸ் ஓடிடியில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக விஷ்ணு விஷால் உருவாகி வெளியாகாமல் இருக்கும் திரைப்படம் மோகன்தாஸ். இந்த படத்தில் ஹீரோயினாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இவர்களுடன் இந்திரஜித் சுமாரான், பூர்ணிமா பாக்கியராஜ், கருணாகரன், அக்ஷய் ராதாகிருஷ்ணன், ஷாரிக், லாலு, பிரகாஷ் ராகவன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

Mohandas

விஷ்ணு விஷாலின் சொந்த நிறுவனமே தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கியுள்ளார். கே.எஸ்.சுந்தரமூர்த்தி என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். சைக்கோ த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இப்படம் விஷ்ணு விஷாலினுக்கு முக்கியமான படமாகும். 

 படு த்ரில்லிங்கில் உருவாகியுள்ள இந்த படத்தின் அனைத்து பணிகளும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே முடிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஜியோ சினிமாவில் வெளியாகவுள்ள இந்த படத்தின் ஓடிடி அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இப்படம் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Share this story