விஷ்ணு விஷால், மமிதா பைஜூவை இயக்கும் ராம்குமார் -என்ன படம் தெரியுமா ?

vishnu-vishal-22

‘முண்டாசுப்பட்டி, ராட்சசன்’ ஆகிய படங்களை உருவாக்கி இயக்குனர் ராம்குமார் தமிழ் சினிமாவில் தனி இடம் பிடித்தவர். இந்த படங்களுக்கு பிறகு ராம்குமார், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், தனுஷை வைத்து ஒரு படம் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. பின்னர் அந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைத்தனர். அதன் பிறகு சத்யஜோதி தயாரிப்பில், விஷ்ணு விஷால், மமிதா பைஜூ என இருவரையும் வைத்து ‘இரண்டு வானம்’ என்கிற படத்தை ராம்குமார் இயக்கியுள்ளார். தற்போது ராம்குமார் அளித்த பேட்டியில், தனுஷ் படம் குறித்து பகிர்ந்துள்ளார்.

‘‘தனுஷுடன் இணைந்து உருவாக்குவதாக இருந்த படத்திற்கு கணிசமான தேதிகள் தேவைப்படுகின்றது. சண்டைக் காட்சிகளுக்கு நிறைய பயிற்சிகள் அவசியமாக உள்ளது. ஒரு வருடமாவது அந்தப் படத்துக்குள் நடிகர்கள் படப்பிடிப்பில் இருக்க வேண்டியிருக்கிறது. 70 நாட்களில் ஒரு படம் பண்ணுவதை விட்டு ஒரு வருடத்திற்கு தேதிகள் தருவது என்பது தனுஷின் இப்போது நிலைக்கு சிரமமாக உள்ளது. அதற்கான ஒரு நேரம் வரும்போது அந்தப் படத்தைச் செய்துவிட முடியும் என்று நம்புகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

Share this story